e0aeaae0af81e0aeb3e0aebfe0aeafe0ae99e0af8de0ae95e0aebee0aeafe0af8de0aea4e0af8d-e0aea4e0af81e0aeb5e0af88e0aeafe0aeb2e0af8d

புளியங்காய்த் தொக்கு

தேவையான பொருட்கள்:

நல்ல பிஞ்சுப் புளியங்காய் – கால் கிலோ,
பச்சை மிளகாய் – 10,
மல்லித்தழை – 1 கைப்பிடி,
கறிவேப்பிலை – 1 கைப்பிடி,
பூண்டு – 4 பல்,
உப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

புளியங்காயைச் சுத்தமாகக் கழுவி, துடைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாக அரையுங்கள்.
கடைசியில் பூண்டு சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் புளியங்காய்க் கலவையில் சேர்த்துக் கலக்குங்கள்.