gongura_pachadi

புளிச்சக்கீரைத் (கோங்குரா) தொக்கு

தேவையான பொருட்கள்:

புளிச்சக்கீரை – 1 கட்டு,
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு,
வெல்லம் – ஒரு சிறிய துண்டு,
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
பூண்டு – 6 பல்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
கடுகு – 1 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 15,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கீரையை இலைகளாகக் கிள்ளி, கழுவி துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் உலர விடுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள். மீந்துள்ள எண்ணெயில் கீரையைச் சேர்த்து, நன்கு வதக்குங்கள். கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.
வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்று கரகரப்பாக அரையுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *