தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 5
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
தேங்காய்த்துருவல் – கால் கப்
உப்பு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பீர்க்கங்காயைக் கழுவி, துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தைத் தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பீர்க்கங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பீர்க்கங்காய் வதங்கியதும், அதனுடன் தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, மீண்டும் நன்கு வதக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.
Add Comment