Beans-spicy-fry1

பீன்ஸ் கூரா

தேவையான பொருட்கள்:

  • பீன்ஸ் – -ஒரு கப்
  • புளி – -நெல்லிக்காய் அளவு
  • உப்பு – -அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – -சிறிது
  • நிலக்கடலை – -ஒரு கைப்பிடி
  • தேங்காய்த் துருவல் – -3 தேக்கரண்டி
  • தனியா – -2 தேக்கரண்டி
  • வர மிளகாய் – -4
  • பட்டை – -1
  • மிளகு – -10
  • பூண்டு – -1
  • லவங்கம் – -4
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு – – -ஒரு
  • தேக்கரண்டி
  • வரமிளகாய் – -2
  • வெங்காயம் – -2
  • பூண்டு – -5 பல்

செய்முறை:

  1. பீன்ஸை கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு சிவந்ததும் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  3. எண்ணெய் பிரிந்து வந்ததும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் பீன்ஸ் மற்றும் புளி சேர்த்து வேக விடவும்.
  4. சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி மற்றும் இட்லி தோசைக்கும் அருமையாக இருக்கும்.