5-beetroot-juice

பீட்ரூட் – வெள்ளரி மிக்ஸ் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் – ½
  • வெள்ளரி – 2
  • கேரட் – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – 50 மி.லி.
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. பீட்ரூட், கேரட் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரியை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. இதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும். இதனுடன் தண்ணீர், உப்பு, சீரகத்தைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து குடிக்கவும்.
  3. Hybrid வெள்ளரியைப் பயன்படுத்தினால் அதன் தோலைச் சீவிக் கொண்டு நறுக்கவும்.
    முற்றாத வெள்ளரியைப் பயன்படுத்தவும்.
  4. இரத்தக்கிழங்கு என்று அழைக்கப்படும் பீட்ரூட், ரத்த செல்களின் உற்பத்திக்கு துணை புரியும்.
  5. கேரட் மற்றும் பீட்ரூட்டில் வைட்டமின்-சி, ஏ, சோடியம், மக்னீஷியம் & உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.
  6. வெள்ளரிச்சாறு உடம்பின் நீர்ச் சத்தை அதிகரித்து, நச்சுக்கிருமிகளை வெளியேற்ற உதவும்.
    ஜூரண சக்தியை அதிகரிக்கும்.
  7. சர்க்கரை நோயாளி கேரட் & பீட்ரூட் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  8. ஆகாரத்துடன் கட்டாயம் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஜூஸ் அதிகம் குடிக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *