தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – கால் கிலோ,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சம்பழச்சாறு – கால் கப்,
உப்பு – 2 டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
பீட்ரூட்டை மண் போகக் கழுவி, தோல் நீக்கி துருவிக்கொள்ளுங்கள். வெந்தயம், பெருங்காயம், சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அத்துடன் பீட்ரூட் துருவலைச் சேருங்கள். நடுத்தரத் தீயில் வைத்து, வேகும்வரை கிளறுங்கள்.
பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.
Add Comment