shutterstock_67794166

பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள்:

  • கேரட் – 2
  • பீட்ரூட் – ஒன்று
  • பாசிப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் / வெண்ணெய் – 2 தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
  • மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  2. வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  3. கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  4. தக்காளி சாஸ், மிளகுத்தூள், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.
  5. சுவையான, சத்தான பீட்ரூட் சூப் தயார்.