almond-soup2

பாதாம் சூப்

தேவையான பொருட்கள்:

  • பாதாம் — 20
  • உருளை — 1
  • டர்னிப் (அ) நூல்கோல் — 1/4 கப் (நறுக்கியது)
  • வெண்ணெய் — 1 ஸ்பூன்
  • பால் — 1/2 கப்
  • பச்சை மிளகாய் — 1
  • சர்க்கரை — 2 டீ ஸ்பூன்
  • சோள மாவு — 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகுப் பொடி — தேவைக்கேற்ப
  • உப்பு — தேவைக்கேற்ப

செய்முறை:

  1. பாதாமை அரை மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து, தோலை உரித்து, மிருதுவாக அரைக்கவும்.
    காய்கறிகளை தோலுரித்து அரிந்து வைக்கவும்.
  2. குக்கரில் வெண்ணெயைப் போட்டு காய்கறிகளைப் போட்டு, நிறம் மாறாமல் வதக்கவும்.
    அதனுடன் பாலையும், ஒருகப் தண்ணீரையும் சேர்த்து, அதனுடன் பச்சை மிளகாய் போட்டு, ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
  3. ஆறியவுடன் பச்சைமிளகாயை எடுத்துவிட்டு, காய்கறிகளை அரைத்து வடிகட்டி வைக்கவும்.
    இதனுடன் அரைத்த பாதாம் விழுது, உப்பு, சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க விடவும்.
    கொதிவந்தவுடன், தீயைக் குறைக்கவும்.
  4. சோள மாவை அரைகப் தண்ணீரில் கரைத்து, கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் சேர்க்கவும்.
    மிளகுத் தூளை பரிமாறும்போது சேர்க்கவும்.