ms two

பாசிப்பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு- – ஒரு கப்
  • பச்சை – மிளகாய்- 2
  • இஞ்சித் துருவல் – -ஒரு டீஸ்பூன்
  • கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – -சிறிதளவு
  • தேங்காய்த் துருவல்- – 2 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய், உப்பு- – தேவையான அளவு.

செய்முறை:

  1. பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும்.
  2. வாணலியில் எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுந்தம்பருப்பு,கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை,இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  3. தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.