bittergourd-curry

பாகற்காய் எள்ளு பச்சடி

தேவையானவை:

  • பாகற்காய் – 1/4 கிலோ,
  • எள்ளு – 100 கிராம்,
  • புளி – ஒரு எழுமிச்சம் பழ அளவு,
  • பச்சை மிளகாய் – 10,
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,
  • வெல்லம் – சிறிது,
  • பெருங்காயம் – சிறிது,
  • உப்பு – தேவையான அளவு,
  • நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்.

செய்முறை:

  1. பாகற்காயை 1/2 அங்குல நீள துண்டுகளாக நறுக்கவும்.
  2. பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  3. எள்ளை வறுத்து பொடி செய்து வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு, பெருங்காயம் பொரித்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு பாகற்காயை சேர்த்து வதக்கவும்.
  6. வதங்கிய பின், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  7. புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
  8. பாகற்காய் வெந்தபின், பொடி செய்த எள்ளு, வெல்லம் சேர்த்து, நன்கு கிளறி, வாசனை வந்ததும் இறக்கவும்.