Tamilnadu-Erode-Pallipalayam-Chicken-masala-Fry-Recipe

பள்ளிபாளையம் சிக்கன்

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் — 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் — 1/4 கிலோ
  • காய்ந்த மிளகாய் — 12
  • மிளகாய்த் தூள் — 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் — 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை — 10
  • துருவிய தேங்காய் — 2 ஸ்பூன்
  • எண்ணெய் — 4 ஸ்பூன்
  • உப்பு — தேவையான அளவு

செய்முறை:

  1. சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைப்பாக்கு அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி, தண்ணீர் வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
    காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி விதையைத் தட்டி எடுத்து விட்டு, மிளகாயை மட்டும் தனியே வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன், கிள்ளி வைத்த மிளகாயை போடவும்.
  3. மிளகாய் சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
    வெங்காயம் வதங்கியபின், கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.
  4. 1 நிமிடம் வதக்கிய பின், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  5. 2 கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும். தண்ணீர் வற்றி, சிக்கன் வெந்தவுடன், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.