பயறு-வெள்ளரி-தயிர்பச்சடி

பயறு வெள்ளரி தயிர்ப்பச்சடி

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய பயறு – 100 கிராம்
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – தயிர் – தலா ஒரு கப்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முளைகட்டிய பயறு, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்துச் சேர்த்து நன்றாக கலக்கவும்.