DSC00591

பட்டாணி மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • காய்ந்த பட்டாணி- – ஒரு கப்
  • இஞ்சி/-பூண்டு விழுது- – ஒரு டீஸ்பூன்,
  • புதினா, கொத்தமல்லி- – சிறிதளவு,
  • சீரகம்- – கால் டீஸ்பூன்,
  • எண்ணெய், உப்பு- – தேவையான அளவு.
  • காய்ந்த மிளகாய் – -3
  • பட்டை – -சிறிய துண்டு
  • ஏலக்காய், கிராம்பு- – தலா ஒன்று,
  • சோம்பு- – கால் டீஸ்பூன்.

செய்முறை:

  1. காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகம், தாளித்து ….. புதினா, கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. இதனுடன் வெந்த பட்டாணி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி
    (விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் தூவி) இறக்கவும்.