img_2154a

பச்சைப் பயறு தோசை

தேவையான பொருட்கள்:

பச்சைப் பயறு – 2 டம்ளர்
சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1/2 கப்
பச்சைமிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது)
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
கறிவேப்பிலை – 6 இலைகள் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

பச்சைப் பயறை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
தோசை மாவு பதத்தில் நீர் விட்டு கரைத்து உப்பு, கறிவேப்பிலை, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து கலக்கி எடுக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், தோசை மாதிரி ஊற்றவும்.
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சுற்றிலும் ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதற்கு தொட்டுக்க தேங்காய்ச் சட்னி நல்லா இருக்கும்.