green-peas-rice

பச்சைப் பட்டாணி ரைஸ்

தேவையானவை:

  • பாசுமதி அரிசி – 2 கப்,
  • பச்சைப் பட்டாணி – அரை கப்,
  • பெரிய வெங்காயம்,
  • நாட்டுத் தக்காளி – தலா 2,
  • எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
  • பச்சை மிளகாய் – 4,
  • இஞ்சி – சிறு துண்டு,
  • பூண்டு – 4 பல்,
  • புதினா,
  • கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
  • தேங்காய்த் துருவல் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
  • பட்டை – சிறு துண்டு,
  • லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,
  • எண்ணெய்,
  • நெய்,
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  1. வெங்காயம், நாட்டுத் தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும்.
  2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை லேசாக வதக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  3. குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் இதனுடன் பச்சைப் பட்டாணி, உப்பு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் அரைத்த மசாலா விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி, மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
  6. ஆனியன் ராய்த்தாவுடன் பரிமாறவும்.