Sorekkai_paruppu_kuzhambu

நெல்லை பருப்புக் குழம்பு

தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு- – 1 கப்
  • கத்தரிக்காய் – -2
  • முருங்கைக்காய்- – 1
  • மாங்காய் – -2 துண்டு
  • உருளைக் கிழங்கு- – 1
  • பச்சை மிளகாய் – -2
  • சின்ன வெங்காயம் – -10
  • தக்காளி- – 1
  • உப்பு- – தேவையான அளவு
  • எண்ணெய்- – 3 ஸ்பூன்
  • தேங்காய் – -1 கப்
  • காய்ந்த மிளகாய் – -5
  • சீரகம்- – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – -அரை ஸ்பூன்
  • புளி- – ஒரு கொட்டைப்பாக்கு அளவு

செய்முறை:

  1. முதலில் துவரம்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  3. காய்களை அரிந்து வேகவைத்துக் கொள்ளவும். வேகவைத்த காய்களுடன் குழைத்த பருப்பு, அரைத்த மசாலாவையும் கலந்து ஒரு கொதிவிடவும்.
  4. பின் கொதித்த குழம்பை சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  5. சூடான சாதத்தில் நெய் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.