Mixed-Vegetable-Aviyal

நெல்லை அவியல்

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக்காய் — 2
  • கத்தரிக்காய் — 2
  • வாழைக்காய் — ஒன்று
  • புடலங்காய் — கால் பகுதி
  • வெள்ளரிக்காய் — சிறிய துண்டு
  • உருளைக்கிழங்கு — ஒன்று
  • சேனைக்கிழங்கு — கால் பகுதி
  • பூசணிக்காய் — ஒரு துண்டு
  • கேரட் — 2
  • பீன்ஸ் — 10
  • மாங்காய் — ஒன்று
  • தக்காளி — ஒன்று
  • வெங்காயம் — 2
  • உப்பு — தேவைக்கேற்ப
  • தேங்காய் — ஒரு மூடி
  • பச்சை மிளகாய் — 8
  • சீரகம் — ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை — 2 இணுக்கு

செய்முறை:

  1. வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும், மற்ற காய்கறிகள் அனைத்தையும் ஒரே அளவான, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் தக்காளி மற்றும் மாங்காய் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து தக்காளி மற்றும் மாங்காயைச் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
  3. 5 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நன்றாகக் குலுக்கிவிடவும். (இதனால் மேலுள்ள காய்கறிகளும் வேகுவதுடன் உடைந்துவிடாமலும் இருக்கும்).
  4. காய்கள் முக்கால் பதமாக வெந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து, மீண்டும் ஒரு முறை பாத்திரத்தைக் குலுக்கவும். அல்லது ஒரு மரக் கரண்டியால் மெதுவாகக் கலந்துவிடவும்.
  5. மேலும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து காய்கள் வெந்ததை சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான நெல்லை அவியல் தயார்.