download

நெய்க்காரப்பட்டி கோலா உருண்டை

தேவையான பொருட்கள்:

  • எலும்பு இல்லாத ஆட்டுக்கறி – ரு கிலோ
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • மிளகாய் – 4
  • பூண்டு – 6 பல்
  • துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
  • நெய் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. எலும்பு இல்லாத ஆட்டுக்கறியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஆட்டுக்கல்லில் இட்டு பருத்தி இழை போன்று தோன்றும் அளவுக்கு மைய அரைக்க வேண்டும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய் இவற்றை வறுத்து எடுத்து கத்தியால் பொடிப்பொடியாக நறுக்க வேண்டும்.
  3. நெய்யை தாராளமாக வாணலியில் இட்டு காய்ச்சி அதில் மேற்படி வெங்காயக் கலவை மற்றும் கறியைப் பிடித்து சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, அவற்றை வாழை நார் கொண்டு கட்டிப்போட வேண்டும் உருண்டைகளை கிட்டத்தட்ட கறுத்துப்போகும் அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும்.
  4. ஒரு கிலோ கறியில் அளவைப் பொறுத்து 22 முதல் 35 உருண்டைகள் செய்ய முடியும்.