quick-easy-chinese-noodle-soup

நூடுல்ஸ் சூப்

தேவையான பொருட்கள்:

  • ப்ளைன் நூடுல்ஸ் – 50 கிராம்
  • கேரட், பீன்ஸ், கோஸ், ப்ரோக்கோலி – 100 கிராம்
  • வெங்காயம் – பாதி
  • பட்டர்/எண்ணெய் – தேவையான அளவு
  • பூண்டு – 4
  • ஸ்பிரிங் ஆனியன் -3
  • ரசப்பொடி – அரை தேக்கரண்டி
  • மிளகுத்தூள் -அரை தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • சத்து மாவு – 2 தேக்கரண்டி
  • கொத்துமல்லித் தழை – சிறிது

செய்முறை:

  1. கேரட், பீன்ஸ், கோஸ், ப்ரோக்கோலி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து குளிர்ந்த நீரில் நனைத்து ஆற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, கேரட், பீன்ஸ், கோஸ், ப்ரோக்கோலி சேர்த்து வதக்கவும்.
  3. வதக்கியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும். கலவை கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் தண்ணீரில் சத்துமாவைக் கரைத்து அதில் சேர்த்துக் கிளறி நூடுல்ஸைச் சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும்.
  4. மேலே கொத்துமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *