c3e511186e0eb4606bf420ba69fb5479

நவதானிய சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • வெள்ளை கொண்டக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை
    காராமணி, பாசிப்பயறு, கொள்ளு, மொச்சை
    சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி- – தலா 4 டேபிள்ஸ்பூன்
  • கறிவேப்பிலை- – சிறிதளவு
  • எண்ணெய், உப்பு- – தேவையான அளவு.
  • தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய் – 4
  • சோம்பு – கால் டீஸ்பூன்
  • பட்டை – சிறிய துண்டு
  • இஞ்சி – சிறிய துண்டு.

செய்முறை:

  1. முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  2. எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த தானியம், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  3. பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.