DSC_1390

நட்ஸ் பால்ஸ்

தேவையான பொருட்கள்:

  • உலர்ந்த அத்திப்பழம் — 7
  • வறுத்த முந்திரி — 5
  • வறுத்த பாதாம் — 5
  • உலர்ந்த திராட்சை — 1 மேசைக்கரண்டி
  • தேன் — 2 டீஸ்பூன்
  • ஏலக்காய்த்தூள் — ரு டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை — 100 கிராம்
  • பொடித்த வெல்லம் — 50 கிராம்
  • நெய் — 1 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. மிக்ஸியில் பொட்டுக்கடலை, வெல்லம், வறுத்து நறுக்கிய முந்திரி, பாதாமைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய உலர்ந்த அத்திப்பழம், உலர்ந்த திராட்சையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இவை அனைத்துடன் நெய்யைச் சேர்த்துப் பிரட்டவும்.
  2. கூடவே தேனைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். சிறு சிறு உருண்டைகள் செய்து நட்ஸ் பால்ஸை சுவைக்கலாம்.