Yellow_Cucumber_Dal__Dosakaya_Pappu

தோசக்காய்ப் பப்பு

தேவையான பொருட்கள்:

  • தோசக்காய் – பாதி
  • வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப்
  • புளி – நெல்லியளவு
  • வெங்காயம் – ஒன்று
  • பூண்டு – 5 பல்
  • தக்காளி – 2
  • உப்பு – தேவைக்கு ஏற்ப
  • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
  • கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் — தாளிக்க
  • கொத்துமல்லி – சிறிது

செய்முறை:

  1. துவரம்பருப்பை பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும். தோசைக்காய் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, தோசக்காய், புளி சேர்த்து அதிக நீர் விடாமல் ஒரு விசில் வைத்து இறக்கவும்.
  3. ஆவி அடங்கியதும் வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கொதி விடவும். எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் தாளிப்பு சேர்த்து தாளிக்கவும்.
    கொத்துமல்லி, தாளிப்பு சேர்த்துப் பரிமாறவும்.