sl5020

தேங்காய்ப் பால் பிரியாணி

தேவையானவை:

  • பாசுமதி அரிசி,
  • தேங்காய்ப் பால் – தலா ஒரு கப்,
  • நீளமாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்,
  • சின்ன உருளைக்கிழங்கு (வேக வைத்து தோலுரித்தது) – 1 கப்,
  • பச்சை மிளகாய் – 3,
  • பட்டை – ஒரு துண்டு,
  • ஏலக்காய், கிராம்பு – தலா 1,
  • நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
  • நெய்,
  • எண்ணெய்,
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  1. குக்கரில் எண்ணெய் விட்டு… பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  2. பிறகு, 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
  3. மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
  4. ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.