2

தூனா ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

 • தூனா மீன் – -2 டின்
 • வெங்காயம் –3
 • மஞ்சள் தூள் – -அரை ஸ்பூன்
 • தக்காளி — 1
 • கறிவேப்பிலை – -தேவைக்கேற்ப
 • பட்டை – -1 துண்டு
 • குருமிளகுத்தூள் – -அரை ஸ்பூன்
 • எண்ணெய் – -3 ஸ்பூன்
 • இஞ்சி-பூண்டு – -1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 • மல்லி இலை — 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
 • மிளகாய்த்தூள் -3/4 ஸ்பூன்

செய்முறை:

 1. முதலில் தூனா மீன் டின்னை திறந்து எண்ணெயை வடித்துக் கொள்ளவும்.பின் ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயம்,கறிவேப்பிலை,பட்டை இட்டு நன்கு பொன்னிறத்தில் வதக்கவும். பின் இஞ்சி பூண்டு நறுக்கியது சேர்த்து மேலும் 3நிமிடம் வதக்கி தக்காளி, மல்லி இலை சேர்த்து தக்காளி உடையும் வரை வதக்கவும். பின் மிளகாய்,
 2. மஞ்சள்,குருமிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கி தூனாவைக்கொட்டி தீயை மிதமாக்கி விட்டுக் கிளறவும்.2 நிமிடத்தில் மசாலா நன்கு தூனாவில் பிடித்து கீமா போல ரோஸ்டாகி வந்தபின் இறக்கிப் பரிமாறவும்