தானிய வடை

தானிய வடை

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது)- – -தலா 100 கிராம்
காய்ந்த மிளகாய்- – -ஒன்று
இஞ்சி- – -ஒரு சிறிய துண்டு
பொடியாக, நறுக்கிய புதினா
கொத்துமல்லி- – -சிறிதளவு
எண்ணெய்- – -500 மில்லி
உப்பு- – -தேவையான அளவு

செய்முறை:

கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இதனுடன் கொத்துமல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.