ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, தக்காளி போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்தவற்றை போட்டு உப்பு, பெருங்காயத் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டு எண்ணெய் தடவி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் முழுவதும் பரவலாக ஊற்றவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்க்க கூடாது.
மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான தக்காளி தோசை தயார்.
இந்த குறிப்பினை நமக்காக செய்து காட்டியவர், திருமதி. பானுமதி குமரப்பன் அவர்கள். பழமையும், புதுமையும் கலந்த புதுவகை சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். கணவர் மருத்துவர் என்பதால், இவரது தயாரிப்புகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.
Add Comment