maxresdefault (1)

டொமாட்டோ நிலவ பச்சடி(தக்காளி ஊறுகாய்)

தேவையான பொருட்கள்:

  • தக்காளி- – 1 கிலோ
  • புளி- – 200 கிராம்
  • மிளகாய்த் தூள்- – 100 கிராம்
  • உப்பு- – 100 கிராம்
  • மஞ்சள்தூள்- – 4 டீஸ்பூன்
  • பூண்டு- – 100 கிராம்
  • வெந்தயம்- – 50 கிராம்
  • எண்ணெய்- – கால் கிலோ
  • கடுகு – -50 கிராம்
  • கடலைப்பருப்பு – -2 டீஸ்பூன்
  • வெந்தயம்- – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம்- – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை- – சிறிது
  • மிளகாய் வத்தல் – -5
  • பூண்டு- – 4 பல் தட்டி வைத்துக் கொள்ளவும்

செய்முறை:

  1. தக்காளியை கழுவி நன்கு ஈரம் போக துடைத்து சின்னதாக அரிந்து ஒரு மூடியுள்ள ஜாடியில் போடவும். அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்கு குலுக்கிவிட்டு மூடி வைக்கவும்.
  2. மூன்றாவது நாள் காலை ஜாடியிலுள்ள தக்காளித் துண்டுகளை நன்கு நீர் போக பிழிந்துகொண்டு ஒரு தட்டில் பரத்தி வெயிலில் வைக்கவும்.
  3. தக்காளியிலிருந்து வந்த நீரில் புளியை (கொட்டை, நார் இல்லாமல் சுத்தம் செய்து) அமிழ்த்தி வைக்கவும்.
  4. தக்காளி ஒரு நாளில் காயவில்லை என்றால் அடுத்த நாளும் வெயிலில் வைக்கவும்.தக்காளி வத்தல் போல காயக் கூடாது. நமத்துப் போனது போல காயவேண்டும்.
  5. வெந்தயத்தை வெறும் வாணலியில் பொரித்துக்கொண்டு, ஆறிய உடன் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
  6. மிக்சி (அ) கிரைண்டரில் ஊறவைத்த புளியை மையாக அரைத்துக்கொள்ளவும். அவை நன்கு அரைந்ததும் காயவைத்த தக்காளியை அரைக்கவும். தக்காளி ஒன்றும் பாதியுமாக அரைபடவேண்டும்.
    அடுத்து பூண்டைப் போடவும். இதுவும் லேசாக தான் அரைபடவேண்டும்.அரைந்து கொண்டிருக்கும் ஊறுகாயில் வறுத்துப் பொடித்த வெந்தயம், மிளகாய்த்தூள் போட்டு நன்கு கலந்ததும், ஊறுகாயை ஒரு பாத்திரதில் வழித்து எடுத்துக்கொள்ளவும்.
  7. ஊறுகாயில் உப்பு-காரம் சரிபார்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்த பொருட்களைப் போட்டு தாளித்து ஊறுகாயில் ஊற்றி நன்கு கிளறவும்.ஊறுகாய் நன்கு ஆறியவுடன் ஜாடியில் எடுத்து வைக்கவும்.
  8. இந்த வகை தக்காளி ஊறுகாய் ஒருவருடத்திற்கு மேல் கெட்டுப்போகாது. சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும். தயிர் சாதம், இட்லி, தோசை போன்றவைக்கும் நன்றாக இருக்கும்.