carica-papaya-1

டெங்கை விரட்டும் உணவுகள்

டெங்கு காய்ச்சலில் இருந்து எளிதில் குணமடைந்திட ஹெல்தி ரெசிபீஸ்

தற்போது தமிழகத்தைப் பெரிதும் அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல், கிமீபீமீs என்ற ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் கொசுவால் பரவுகிறது. சுத்தமான நீரில் முட்டையிட்டு தன் இனத்தைப் பெருக்கும் இந்தக் கொசுவின் வயிற்றின் அடிப்பகுதியில் கருப்பு & வெள்ளை நிறத்தில் வரிவரியாய்க் கோடுகள் இருக்கும். பகலில் கடிக்கும் இந்த கொசு, பொதுவாக நமது முழங்கால், முழங்கை மற்றும் கணுக்காலில் கடிக்கும்.
இந்தக் கொசு கடித்து சுமார் ஒரு வாரம் கழித்து இதன் பாதிப்பு தெரியும்.
டெங்கு காய்ச்சல் ஒரு தொற்று நோயல்ல. கொசுக்கடியால் பரவும் வைரஸ் நோயாகும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரைக் கடித்த கொசு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படாதவரைக் கடித்தால் அவருக்கும் டெங்கு காய்ச்சல் வரும்.
தொடர்ந்து 3–4 நாட்களுக்கு அதிக காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, தசைவலி, மூட்டு வலி, அதிக வேர்வை, வயிற்றுக்கடுப்பு, கண்ணுக்குப்பின் வலி, தோல் நிறம் மாற்றம் மற்றும் ரத்தக்கசிவுகள் போன்றவை டெங்கு காய்ச்சல் பாதிப்பின் அறிகுறியாகும்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் எளிதில் தாக்கும். இந்த டெங்கு காய்ச்சல் படிப்படியாக ஒரு வாரத்தில் குறையும். டெங்கு காய்ச்சலுக்கெனத் தனி மருந்து கிடையாது. கட்டாயம் அதிக ஓய்வு தேவை. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் தனக்குத் தெரிந்த சுய மருந்துகளை சாப்பிடக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் பெற்ற பின்பே மருந்துகளைச் சாப்பிடவும். சில நோயாளிகளுக்கு பிளட் பிரஷர் மற்றும் க்ஷீணீtமீ குறையும்.
இந்த நோயின் அறிகுறிகள் தெரிந்த பின்பு சரியான மருத்துவரை அணுகவும்.
மருந்துகளை விட நாம் உண்ணும் உணவினாலும் இந்த டெங்கு காய்ச்சலில் இருந்து எளிதில் குணமடையலாம்.
முக்கியமாக இந்த வைரஸ் தாக்கியவுடன் நமது இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறையும். நம் உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தட்டணுக்கள் தேவை. இல்லையெனில் அனைத்து உடல் பாதிப்புகளுடன் இரத்தக் கசிவு ஏற்படும். தட்டணுக்கள் அதிகம் குறைந்தால் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் தட்டணுக்கள் பாதிக்கும்.
டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவருக்கு வெகுவாக தட்டணுக்கள் குறையும். காய்ச்சல் குறைந்தவுடன் தட்டணுக்களின் உயர்வே டெங்கு காய்ச்சல் குணமடைய காரணம்.
டெங்குவினால் பாதிக்கப்பட்டோர் உடல்நலிவு நீங்கிட சத்தான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். அதோடு நீர்ச்சத்து அதிகம் உள்ள பானங்களும் எடுத்துக்கொள்வது அவசியம். டெங்குவால் ஏற்பட்ட உடல்சோர்வு தீரவும், உடல்நலம் தேறவும் சில ஹெல்தி ரெசிபீஸ்களை உங்களுக்காக அறுசுவை தருகிறது.
இந்த ரெசிபிகளை எல்லோருமே எடுத்துக் கொள்ளலாம். டெங்குவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.