jj26_edited_edited

ஜந்திகலு

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு- – 8 கப்
  • உளுந்து- – 1 கப்
  • வெண்ணெய்- – 4 டீஸ்பூன்
  • எள் – -25 கிராம்
  • மிளகாய்த் தூள்- – 2 டீஸ்பூன்
  • உப்பு- – தேவையான அளவு
  • எண்ணெய் – -தேவையான அளவு

செய்முறை:

  1. அரிசிமாவை சலித்து வைத்துக்கொள்ளவும். உளுந்தைக் கழுவி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து குழைய வேக வைத்துக்கொள்ளவும்.
  2. குழைய வெந்த உளுந்தை ஆறியதும் மிக்சியில் அரைத்துக்கொண்டு,அதை அரிசிமாவில் போடவும்.
    அரிசிமாவில் உளுந்துமாவு, எள், வெண்ணெய், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மாவைப் பிசறவும்.
  3. அனைத்து பொருட்களும் நன்கு கலந்ததும், தேவையான அளவு நீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
  5. சுவையான ஜந்திகலு ரெடி.
  6. இந்த முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் சுலபம்