_DSC0755

சோயா 65

தேவையான பொருட்கள்:

  • சோயா – 100 கிராம்
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • சிக்கன் 65 மசாலா – ஒரு தேக்கரண்டி
  • கடலை மாவு – 50 கிராம்
  • மிளகாய்த்தூள் – தேவையான அளவு
  • கரம் மசாலாத்தூள் – சிறிதளவு
  • எண்ணெய் – பொரிப்பதற்கு – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. சோயாவில் சூடான தண்ணீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். சோயா நன்கு ஊறிய பின்னர் தண்ணீர் முழுவதையும் பிழிந்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை சுற்றி எடுக்கவும்.
  2. பின்பு அரைத்த சோயாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி எண்ணெய் தவிர மேலே சொன்ன மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  3. உருண்டை பிடிக்கும் அளவிற்கு இருந்தால் போதுமானது. அதிக தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான சோயா 65 தயார்.
  5. சாம்பார் சாதம், ரச சாதம் ஆகியவற்றுடன் சரியான ஜோடி. உடனே செய்து விடக்கூடிய சைட் டிஷ். மாலை நேர ஸ்நாக்ஸாக கூட சாப்பிடலாம். புளிப்புச் சுவை விரும்பினால் தண்ணீருக்குப் பதில் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்துப் பிசையலாம் அல்லது எலுமிச்சைச் சாறு பிழியலாம்.