diwali-sweets-feature

சுவை மிகுந்த தீபாவளி ஸ்வீட்ஸ்&காரம்!

தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கும். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற அவற்றை எரித்துவிட வேண்டும்.
சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்ற ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் ஒரு பக்கம்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்களை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.
தீபாவளி நமக்குச் சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டைச் சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.
நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை அன்றைய தினம் முதல் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை என்று எத்தகைய பிரச்னை இருந்தாலும் விட்டு விடுங்கள். பகைவருடனும் தீபாவளி அன்று அவருக்கு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இந்த தீபாவளிக்கு செய்ய சிறப்பு ஸ்வீட்ஸ் & காரவகைகள் இதோ…