sura puttu 2

சுறா மிளகு ஆனம், சுறாப் புட்டு

தேவையான பொருட்கள்:

  • சுறா மீன் — கால் கிலோ
  • மிளகு — 1 டீஸ்பூன்
  • சீரகம் — அரை டீஸ்பூன்
  • மிளகாய் வற்றல் — 1
  • மல்லி — 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் — அரை ஸ்பூன்
  • பூண்டு — 4 பல்
  • தேங்காய்த் துருவல் — 2 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் — 1
  • தக்காளி — 1
  • புளி — கொஞ்சம்
  • எண்ணெய் — 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு, உளுந்தம்பருப்பு — அரை ஸ்பூன்
  • முருங்கை இலை — இரண்டு கைக்கொத்து
  • உப்பு — தேவைக்கு.
  • ஆனத்தில் உள்ள மீன்
  • எண்ணெய் — 2 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் — 2 பெரியது (பொடியாக கட் பண்ணிக்கொள்ளவும்)
  • கடுகு, உளுந்தம்பருப்பு — அரை ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் — அரை ஸ்பூன்
  • மிளகாய் — 2
  • தேங்காய்த் துருவல் — 2 டேபிள்ஸ்பூன்
  • மல்லி, கறிவேப்பிலை — கொஞ்சம்
  • லைம் ஜூஸ் — 1 ஸ்பூன்

செய்முறை:

  1. மீனை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.
    மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி சேர்த்து தூள் செய்யவும். மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்க்கவும். பூண்டு, தேங்காய், வெங்காயம் பாதி, தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அரைத்த மசாலாவுடன் புளிகரைத்தது, உப்பு சேர்க்கவும்.
  2. கூட்டிய குழம்பை கொதிக்க வைக்கவும். மசாலா வாடை அடங்கியவுடன் மீனை சேர்த்து வேக விடவும். முருங்கை இலை போடவும், கொதித்தவுடன் இறக்கவும்.
    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம் தாளித்து ஆனத்தில் கொட்டவும்.
    சுறா மிளகு ஆனம் ரெடி.
  3. ஆனத்தில் உள்ள மீனை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். முள் உள்ளதை ஆனத்தில் போட்டு விடவும்.
    தேங்காய் — மிளகாய் கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்த மீனைப் போடவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும். நன்றாக கிளறவும்.
  5. தேங்காய், மிளகாய் அரைத்து வைத்ததை போட்டு பிரட்டி, மல்லி இலை தூவி லைம் ஜூஸ் விட்டு பிரட்டி இறக்கவும். காரம் தேவைப்பட்டால் மிளகுத் தூள் கால் ஸ்பூன் தூவிக்கொள்ளலாம்.
    சுவையான சிம்பிலான சுறாப் புட்டு ரெடி.