Rajma Sundal 0002

சிவப்பு ராஜ்மா சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • சிவப்பு ராஜ்மா – -ஒரு கப்
  • கடுகு, சீரகம் – -தலா கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை- – சிறிதளவு
  • தேங்காய்த் துருவல்- – 2 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய், உப்பு- – தேவையான அளவு.
  • காய்ந்த மிளகாய்- – 3
  • தனியா- – கால் டீஸ்பூன்
  • சோம்பு – -கால் டீஸ்பூன்
  • பட்டை – -சிறிய துண்டு.

செய்முறை:

  1. ராஜ்மாவை 10—12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
  2. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெந்த ராஜ்மா, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  3. இதனுடன் செய்து வைத்துள்ள பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.