chicken-and-vegetable-soup-with-pasta-84715-1

சிக்கன் பாஸ்தா சூப்

தேவையான பொருட்கள்:

  • கோழிக்கறி — கால் கிலோ
  • பாஸ்தா (அ) நூடுல்ஸ் — ஒரு கோப்பை
  • வெங்காயம் — ஒன்று
  • கேரட் — ஒரு கோப்பை
  • காலிப்ளவர் — ஒரு கோப்பை
  • மிளகுத்தூள் — அரை தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் — அரை தேக்கரண்டி
  • இஞ்சி விழுது — அரை தேக்கரண்டி
  • பூண்டு விழுது — அரை தேக்கரண்டி
  • கொத்துமல்லி — இரண்டு மேசைக்கரண்டி
  • எண்ணெய் — இரண்டு மேசைக்கரண்டி
  • தண்ணீர் — நான்கு கோப்பை

செய்முறை:

  1. கோழியில் உள்ள எலும்புகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடி கனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை கொட்டி வறுக்கவும். பிறகு கோழித்துண்டுகளை போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிவிட்டு நறுக்கி வைத்த காய்களை போட்டு கிளறி விடவும்.
    தொடர்ந்து உப்புத்தூள்,
  3. மஞ்சள்தூள்,மிளகுத்தூளை தூவி நன்கு கிளறி விட்டு தண்ணீரை சேர்க்கவும்.பின்பு கொத்தமல்லியை தூவிவிட்டு கொதிக்கவிடவும்.
  4. நன்கு கொதித்தவுடன் பாஸ்தாவை போட்டு கலக்கிவிடவும். அடிப்பின் அனலை மிக குறைந்த அனலில் வைத்து அடி பிடிக்காதபடி அடிக்கடி கிளறிவிடவும்.
  5. பத்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.பிரியப்பட்டால் சிறிது சீஸ் தூளை தூவி சூடாக பரிமாறவும்.
  6. தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிக்கன் வேகவைத்த சூப்போ, அல்லது காய்கறிகள் வெந்த சூப்பையோ ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *