chikili

சிகிளி

தேவையான பொருட்கள்:

வறுத்த வெள்ளை எள் – 100 கிராம்
சீவிய வெள்ளை வெல்லம் – (பாகு வெல்லம் வேண்டாம். மிக்ஸியில் ஒட்டிக் கொள்ளும்) – 50 கிராம்
நெய் – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை:

எள், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் நெய் சேர்த்து பிசறி வைத்தால்… சுவையான சிகிளி (எள் ஸ்வீட் பொடி) தயார்.
நாக சதுர்த்தி, கருட பஞ்சமி தினங்களில் விரதம் இருப்பவர்கள் விசேஷ உணவாக இதைச் சாப்பிடுவார்கள்.