1-IMG_1201

சாபுதானா (ஜவ்வரிசி) சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி – -ஒரு கப்
  • முளை கட்டிய பச்சைப்பயறு – -முக்கால் கப்
  • கீறிய பச்சை மிளகாய் – -2
  • இஞ்சித் துருவல்- – ஒரு டீஸ்பூன்
  • கேரட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்)
  • நெய்- – ஒரு டீஸ்பூன்
  • கொத்தமல்லி- – சிறிதளவு
  • உப்பு- – தேவையான அளவு.

செய்முறை:

  1. ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் அல்லது மிருவாதுவாகும் வரை ஊற வைக்கவும்.
  2. முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வெந்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  3. துருவிய கேரட் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி,(விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் தூவி கிளறி இறக்கவும்.