079

சாக்லெட் அத்திப்பழம்

தேவையான பொருட்கள்:

  • அத்திப்பழம் — 6
  • டார்க் ப்ரௌன் சாக்லெட் — 100 கிராம்
  • உலர்ந்த திராட்சை — 1 மேசைக்கரண்டி
  • நறுக்கிய வாலட் நட் — லு மேசைக்கரண்டி
  • ஆறிய பால் — 50 மி.லி

செய்முறை:

  1. துருவிய ப்ரௌன் சாக்லெட்டை வாணலியில் சேர்க்கவும். கூடவே ஆறிய பாலைச் சேர்க்கவும். சுமார் 30 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறிய அத்திப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து, பாலுடன் உள்ள சாக்லெட்டை வைத்து உருகச் செய்யவும்.
  2. அதனுடன் மசித்த அத்திப்பழம், பொடியாய் நறுக்கிய உலர்ந்த திராட்சை, வால்நட்ஸை சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்யவும்.
  3. அடிபிடிக்காமல் 5 நிமிடம் சிம்மில் கிளறவும். அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆறியவுடன் மோல்டில் சேர்த்து சுமார் 2- — 3 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். கெட்டியானவுடன் சாக்லெட் அத்திப்பழத்தைச் சுவைக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.