DSC_0492

கொள்ளு சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • முளைகட்டிய கொள்ளு- – ஒரு கப்
  • காய்ந்த மிளகாய் – -2
  • கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம்- – தலா அரை டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள்- – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை- – சிறிதளவு
  • தேங்காய்த் துருவல்- – 2 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய், உப்பு- – தேவையான அளவு.

செய்முறை:

  1. முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்,
    இஞ்சித் துருவல்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  2. இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.