ragi-pakoda-pic1_thumb

கேழ்வரகு பக்கோடா

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – ஒரு கப்
பச்சைமிளகாய் – 5
இஞ்சி – சிறிது
பூண்டு – சிறிது
எண்ணெய் – கால் கிலோ
வெங்காயம் – 2
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
கசகசா – சிறிது

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கசகசா இவற்றுடன் தேவையான அளவு தண்னீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.