squid-koonthal-kanava-roast

கூந்தள் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

  • கூந்தள் மீன் — ஒரு கிலோ
  • வெங்காயம் — மூன்று
  • கறிவேப்பிலை – – இரண்டு
  • கொத்து சோம்பு — அரை ஸ்பூன்
  • பச்சை மிளகாய் — இரண்டு ( பொடித்தது )
  • மஞ்சள்தூள் — அரை ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் — ஒரு ஸ்பூன்
  • இஞ்சி மற்றும் பூண்டு விழுது – -ஒரு ஸ்பூன்
  • தக்காளி – 1

செய்முறை:

  1. முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு காயவைத்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  2. அதன் பின் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,சோம்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி நன்கு சுத்தம் செய்த கூந்தள் மீனை சேர்க்கவும்.
  3. பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விடவும். மீன் வெந்திருக்கும். அதிகம் தண்ணீர் காணப்படும்.மூடியைத் திறந்து தண்ணீர் வற்றி ரோஸ்டாக வரும்வரை கொதிக்க விடவும்.சுமார் 10 நிமிடம் வற்றவிட்டால் மிகச் சுவையான கூந்தள் மீன் ரோஸ்ட் தயார்