DSC05214

கும்மாயம்

தேவையான பொருட்கள்:

  • உளுந்து — ஒரு டம்ளர்
  • பச்சரிசி — அரை டம்ளர்
  • பயத்தம் பருப்பு — கால் டம்ளர்
  • நெய் — 150 கிராம்
  • கருப்பட்டி அல்லது வெல்லம் — 150 கிராம்

செய்முறை:

  1. தேவையான பொருட்களை அளந்து தயாராக எடுத்துக் கொள்ளவும்.
    பயத்தம் பருப்பு, உளுந்து, பச்சரிசி மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
    வறுத்தவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து சலித்து வைக்கவும்.
  2. வாணலியில் நெய் ஊற்றி சலித்த மாவைப் போட்டு வறுக்கவும்.
    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். வடிகட்டிய தண்ணீரை மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும்.
  3. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
    கரைத்து வைத்திருக்கும் மாவை கொதிக்கும் வெல்லப் பாகில் சேர்த்து கிண்டவும்.
  4. கிண்டும் போது இடையில் நெய் சேர்த்துக் கிண்டவும். விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். மாவு நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்.
  5. சுவையான கும்மாயம் ரெடி. இது ஒரு செட்டிநாடு வகை ஸ்பெஷல் இனிப்பு.