gutti_vankaya_stuffed_eggplant_recipe

குத்து வங்காயி

தேவையான பொருட்கள்:

  • சின்ன கத்தரிக்காய்- – கால் கிலோ
  • வெங்காயம் – -4
  • இஞ்சி பூண்டு விழுது – -1 டீஸ்பூன்
  • கரம் மசாலா- – 1 டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள்- – 2 டீஸ்பூன்
  • தனியாத் தூள் – -1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள்- – அரை டீஸ்பூன்
  • வெண்ணெய்- – 1 டீஸ்பூன்
  • கொத்துமல்லி இலை – சிறிது
  • உப்பு- – தேவையான அளவு
  • எண்ணெய்- – 1 குழிக் கரண்டி

செய்முறை:

  1. வெங்காயத்தை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
    அதில் இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா, மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. கத்தரிக்காயை கழுவி நான்காகப் பிளந்து வைத்துக் கொள்ளவும். காம்புடன் இருக்கவேண்டும்.
    அதில் கலந்து வைத்துள்ள மசாலாவை ஸ்டஃப் செய்யவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டஃப் செய்த கத்தரிக்காய்களை அதில் ஒவ்வொன்றாக போடவும். மீதமிருக்கும் மசாலாவை கத்தரிக்காயின் மேல் போடவும்.
  4. கத்தரிக்காய்களை சிம்மில் வேகவிடவும். நன்கு வெந்ததும் கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
    சின்ன சின்ன கத்தரிக்காயாக இருந்தால் சீக்கிரம் வேகும். சூடான சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.