capsicum-stir-fry

குடமிளகாய்த் தொக்கு

தேவையான பொருட்கள்:

குடமிளகாய் – கால் கிலோ
எலுமிச்சம் பழச்சாறு – அரை கப்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
வறுத்துப் பொடித்த வெந்தயம்- – 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

குடமிளகாயைக் கழுவி துடைத்து, விதை நீக்கிப் பொடியாக நறுக்கி தனியே வையுங்கள். மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, குடமிளகாயைச் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியபின், அரைத்த விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்குங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *