chicken-chilli

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

 தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1 கிலோ
  • மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 4
  • எலுமிச்சை – அரை மூடி
  • கலர்பொடி – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • கருவேப்பிலை – 2 ஆர்க்கு
  • உப்பு – தேவைக்கேற்ப

  செய்முறை:

  1. காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.
  2. சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
  3. 2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.
  4. வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
  5. சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..