mushroom-stirfry-1

காளான் பொரியல்

 தேவையான பொருட்கள்:

  • காளான் – அரைக்கிலோ
  • வெங்காயம் – இரண்டு
  • தக்காளி – ஒன்று
  • பச்சைமிளகாய் – இரண்டு
  • பூண்டு – இரண்டு பற்கள்
  • மிளகுத்தூள் – அரைதேக்கரண்டி
  • சீரகத்தூள் – கால் தேக்கரண்டி
  • கொத்தமல்லி – ஒரு பிடி
  • எண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
  • கடுகு – ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • உப்புத்தூள் – ஒரு தேக்கரண்டி

  செய்முறை:

  1. காளானை ஒரு கெட்டியான துணியினால் நன்கு துடைத்து விட்டு மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
  2. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை நறுக்கி கொள்ளவும். பூண்டை நசுக்கி கொள்ளவும்.
  3. ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெயை காய வைத்து கடுகை பொரியவிட்டு கறிவேப்பிலையை போட்டு வெங்காயம் பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும்.
  4. பிறகு தக்காளி பச்சைமிளகாயைப் போட்டு வதக்கி எல்லாத்தூளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  5. தக்காளி நன்கு வதங்கியவுடன் நறுக்கிய காளானைக் போட்டு கிளறி விட்டு வேகவிடவும்.
  6. ஐந்து நிமிடத்தில் காளான் வெந்துவிடும். உடனே இறக்கி விட்டு கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.