vegetable-idiyappam

கலர்ஃபுல் பிரியாணி

தேவையானவை:

  • பாசுமதி அரிசி – 1 கப்,
  • பப்பாளிக்காய்,
  • சிவப்பு,
  • மஞ்சள்,
  • பச்சை குடமிளகாய்,
  • பீன்ஸ்,
  • கேரட்,
  • தக்காளி கலவை – ஒரு கப்,
  • வயலட் முட்டைகோஸ் – கால் கப்,
  • நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப்,
  • நறுக்கிய புதினா,
  • கொத்தமல்லி – சிறிதளவு,
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
  • பட்டை – ஒரு துண்டு,
  • கிராம்பு,
  • ஏலக்காய்,
  • பிரிஞ்சி இலை – தலா 1,
  • பச்சை மிளகாய் – 10,
  • எண்ணெய்,
  • நெய்,
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  1. அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு… பச்சை மிளகாயை கிள்ளிப் போடவும்.
  3. அது சுருண்டு, அதன் காரம் எண்ணெயில் இறங்கியதும்… மிளகாய்களை எடுத்து விடவும்.
  4. பிறகு, அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து… இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
  5. பச்சை வாசனை போனவுடன், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
  6. காய்கறிகளின் நிறம் மாறாமல் வதக்கி, அரிசி, உப்பு, தண்ணீர் விட்டு மூடவும்.
  7. ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி போனதும் மூடியைத் திறந்து கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.