201603310707284323

கறிவேப்பிலைத் தொக்கு

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை ( உருவியது ) – 3 கப்
உளுந்தம் பருப்பு – கால் கப்
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – ஒரு சிறு துண்டு
உப்பு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 20
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
எண்ணெய் – கால் கப்

செய்முறை:

 

கறிவேப்பிலையைக் கழுவி துடைத்து, துணியில் பரப்பி உலரவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், சீரகம், உளுந்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், சிறிது சிறிதாக வதக்கி எடுங்கள்.
கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுந்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *