hqdefault

கர்நாடகா வடை

தேவையான பொருட்கள்:

உளுந்தம் பருப்பு – ஒரு கப்
பச்சை மிளகாய் — 3
மிளகு — ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை — சிறிய கட்டு
உப்பு — தேவையான அளவு
எண்ணெய் — பொரிப்பதற்கு

செய்முறை:

உளுந்தில் தன்ணீர் ஊற்றி, சுமார் 6 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
கொத்துமல்லித் தழையையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுந்து ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, மிளகு சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு உளுந்து மாவுடன் கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மாவினை வடைகளாகத் தட்டிப் போடவும். தீயை மிதமாக வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.