chicken-kabsa-rice-platter-2

கப்ஸா சோறு

 தேவையான பொருட்கள்:

  • முழு கோழி — இரண்டு
  • அரிசி — அரை கிலோ
  • எண்ணெய் — 50 மில்லி
  • தக்காளி — மூன்று
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் — 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • பட்டர் — ஒரு டீஸ் ஸ்பூன்
  • உப்பு — தேவையான அளவு
  • பட்டை- ஒரு விரல் நீளம் – ( இரண்டு )
  • ஏலக்காய் — மூன்று
  • கிராம்பு — நான்கு
  • வெங்காயம் — மூன்று

செய்முறை:

  1. கோழி இறைச்சியை நன்கு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும். நான்கு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு சுத்தம் செய்த கோழிக்கறியை அப்படியே போட்டு வேக விடவும்.வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும், கறியை தனியாகவும் வைக்கவும்.
  2. ஒரு வாணலியை காயவைத்து அதில் எண்ணெய் பட்டரை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வாசனை வந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.
  3. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழித் தண்ணீரை தாளித்ததில் ஊற்றவும்.
  4. தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வேக வைத்துள்ள கோழிக்கறியையும் சேர்த்து தீயைக் குறைத்து தம் போடவும். இப்போது சுவையான கப்சா சோறு.(அரேபியர்கள் விரும்பி உண்ணும் உணவு)

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *