baingan-biryani7p1010148

கத்திரிக்காய் பிரியாணி

தேவையானவை:

  • பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ,
  • பாசுமதி அரிசி – ஒரு கப்,
  • சின்ன வெங்காயம் – கால் கப்,
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை – சிறிதளவு,
  • நெய்,
  • எண்ணெய்,
  • உப்பு – தேவையான அளவு.
    வறுத்துப் பொடிக்க கிராம்பு – 2,
  • தனியா – ஒரு டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு,
  • உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
  • வெந்தயம் – கால் டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய் – 4, மிளகு – அரை டீஸ்பூன்,
  • புளி – 50 கிராம்,
  • தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

  1. புளி நீங்கலாக, வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அதே கடாயில், புளியை சிறு துண்டுகளாகப் போட்டெடுத்து, வறுத்தவற்றைச் சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும். கத்திரிக்காயை நடுவில் மட்டும் நான்காகப் பிளந்ததுபோல் நறுக்கவும்.
  3. அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  4. கடாயில் நெய் விட்டு ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
  5. குக்கரில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  6. அதே எண்ணெயில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பொடித்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  7. அரிசி சேர்த்துக் கிளறி, தண்ணீர் விட்டு, வறுத்த கத்தரிக்காயைச் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் வேக விடவும்.
  8. ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி போனதும் திறந்து, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.